Bigg Boss உச்சகட்ட கோபத்தில் ஆரீ! பாலாஜியின் முகத்திரையை கிழித்த குறும்படம்

Bigg Boss4 Tamil |Day 31 உச்சகட்ட கோபத்தில் ஆரீ அர்ஜுனன். பாலாஜியின் முகத்திரையை கிழித்த குறும்படம் | Day 31
பிக் பாஸ் சீசன் -4 தொடங்கி இதுவரை ஒரு மாதம் கடந்து விட்டது தற்போது இந்த வீட்டில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
#Day31 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/u44fN0C3pN
— Vijay Television (@vijaytelevision) November 4, 2020
நேற்று Day 31 Bigg Boss4 Tamil நடைபெற்ற நீதிமன்ற Task இல் இந்த வார அணித்தலைவர் சம்யுக்தா மற்றும் ஆரீ இடையே காரசார விவாதம் நடைபெற்றது. சம்யுக்தா தன்னுடைய வாதத்தை முன் வைத்தார், ஆரீ கார்னர் செய்யவில்லை அவரே அனைவரும் கார்னர் செய்வதாக நினைத்துக் கொண்டே இங்கே பிரச்சினையை கிளப்பி வருகிறார் என்று பேசினார்.
அதன் பிறகு பேசிய ஆரீ இந்த வீட்டில் பிக்பாஸ் தலைவராக எந்த ஒரு தகுதியும் இல்லாத சம்யுக்தா எதன் அடிப்படையில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற வாதத்தை முன் வைத்தார். மேலும் பாலாஜிக்கு சோம் தலைவராக விருப்பம் இல்லை அதனால் சம்யுக்தா தலைவராக தேர்ந்தெடுப்பதற்கு உதவினார், இதன் காரணமாக சம்யுக்தா பாலாஜியை எல்லா நிலைகளிலும் சாதகமாகவே பேசுகிறார் என்று கனத்த குரலில் பேசினார்.
#Aari words are true. No one can ignore. Way to go man...
— Arun (@ArunM77795775) November 4, 2020
#AariArjunan#BiggBossTamil #BiggBoss4Tamil#BiggBossTamil4 pic.twitter.com/FXGU3QTufD
மேலும் ஆரீ தொடர்ந்து மூன்று முறை சம்யுக்தா பார்த்து தருதலை தருதலை தருதலை என்று கத்தினார். அந்த நேரத்தில் குறுக்கிட்ட பாலாஜியை எதை சொல்ல வேண்டுமென்றாலும் உனக்கான நேரம் வரும் போது சொல் அதுவரை அமைதியாக இரு என்று சொல்ல ஆனால் பாலாஜியோ சொல்ல முடியாது என்று சொல்ல உச்சகட்ட கோபமடைந்தார் ஆரீ .
ஆரீக்கு ஆதரவாக அனிதா மற்றும் சனம் ஆகியோர் அவரது வாதங்களை முன்வைத்தனர். சம்யுக்தாக்கு ஆதரவாக பாலாஜி மற்றும் ஷிவானி ஆகியோர் தங்கள் வாதங்களை முன்வைத்தனர் .
இருவரின் வாதங்களை கேட்ட நீதிபதி சுசித்ரா ஆரீ இந்த வீட்டில் கார்னர் செய்யப்படுகிறார் என்று நினைப்பவர்கள் மற்றும் செய்யப்படவில்லை என்று நினைப்பவர்கள் என்ற வாக்குகள் அடிப்படையில் சம்யுக்தா விற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினார்.
அதன் பிறகு வெளியே காலரி ஏரியாவியில் சம்யுக்தா ஆஜித் இடம் “ஆரி அவர்களின் வளர்ப்பு அப்படி, ஒரு பொண்ணு கிட்ட எப்படி பேசணும் தெரியல இவ்வன்ல வந்துட்டான் பிக் பாஸுக்கு என்று தரக்குறைவாக பேசினார். ஹவுஸ் மேட்டில் பலருக்கு இந்த விஷயம் தெரியாது, கண்டிப்பாக இது வரும் வாரங்களில் பிரதிபலிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ,
#BiggBoss4Tamil #Aari @dancersatz
— I don't care (@Dontgivedamn2) November 4, 2020
That dhigil kudukum real warning to balaji by aari today pic.twitter.com/kA6XpObdDT
அதன் பிறகு சம்யுக்தா ஹவுஸ் மேட் அனைவரிடமும் தலைவர் ஆக IAS படிக்கணும் போல என்று பேச ஆரம்பிக்க அப்பொழுது ஆரி குறுக்கிட்டு பேசும்போது திடீரென பாலா பேச வீட்டில் அனல் பறந்தது. இருவருக்கும் கைகலப்பு நடக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த போது ஆரி பாலாவைப் பார்த்து என்னை நீ என்ன பிராண்ட் செய்யாது நீ என்னை பிராண்ட் செய்ய நினைத்தால் நீ செய்த எல்லா தில்லுமுல்லு களையும் கிழிச்சி விடுவேன் என்று பாலாவை கடுமையாக விமர்சித்தார்.
பாலா தன் பங்குக்கு பேச ஆரியின் பேச்சுக்கு பாலாவால் சமாளிக்க முடியவில்லை. பாலா சொன்னது அனைத்தும் பொய் என்று டுவிட்டர் வாயிலாக குறும்படங்களை பகிர்ந்தனர் பிக் பாஸ் ரசிகர்கள். இதை பற்றி கமல் இந்த வாரம் விவாதிப்பார் இதனால் பாலாவின் இமேஜ் வரும் வாரங்களில் குறையும் என்றும் இந்த வாரம் பாலா வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.