மயிலையில் தொடங்கியது புதிய வரலாறு

temple priest as dalith

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்- மு.க.ஸ்டாலின்

தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை அகற்றும் கலைஞரின் கனவை நனவாக்கும்வண்ணம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையின்கீழ் முறையாகப் பயிற்சிபெற்ற  அர்ச்சகர்களுக்கு மயிலை கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் தவத்திரு குன்றக்குடி அடிகளார், பேரூர் அடிகளார் முன்னிலையில், ஆகம விதிகளில் பயிற்சிபெற்ற 5 தலித் மாணவர்கள்  உள்பட 58 பேரை அர்ச்சகர்களாக நிமித்து ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கௌமார மடாதிபதி குமரகுருபர சுவாமிகள் முன்னிலையில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வு !
” அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டுமென்பது அப்பர் பெருமான் & ராமானுஜரின் எண்ணம்” – குன்றக்குடி அடிகளார் குறிப்பிட்டது