அஜித் நடிக்கும் AK 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
Ak 62
Share on socialmedia

அஜித் #62

நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது கிட்டத்தட்ட சுமார் 250 கோடி ரூபாய் வசூலை அள்ளி தமிழ் சினிமாத்துறைக்கு ஒரு புத்துணர்வை கொடுத்துள்ளது. வலிமை திரைப்படம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் வினோத் கூட்டணியில் AK 61 படத்தை நடிக்கவிருக்கிறார் அஜித். இப்படத்தை மீண்டும் போனி கபூர் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில் அதற்குள்ளாக அஜித் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு அப்டேட் அஜித் கொடுத்துள்ளார். தன்னுடைய 62வது படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பில் போடா போடி நானும் ரவுடிதான் படங்களை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் அஜித்குமாரின் 62 வது படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அனிருத் அஜித் கூட்டணியில் பாடல்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் AK 62 படமும் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று ரசிகர்கள் டிவிட்டரில் கொண்டாடி வருகின்றனர். மேலும் அனிருத் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரும் தங்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் இது குறித்தும் பதிவு செய்துள்ளனர்.

AK62 திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி மே மாதம் தொடக்கத்தில் அல்லது அஜித் குமார் பிறந்தநாளில் திரையரங்குகளில் வெளிவரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து #AK62WithLycaProductions ட்விட்டரில் இந்திய அளவில் நம்பர் ஒன் இடத்தை அஜித் ரசிகர்கள் trend செய்து வருகின்றனர். அடுத்த ஒரு வருடத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்களை கொடுத்து அஜித் தமிழ் ரசிகர்களை மிரள வைக்கப் போகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Leave a Reply