பாடல் : அகநக அகநக முகநகையே
படம் : பொன்னியின் செல்வன்-2 (2023)
இசை : AR. ரஹ்மான்
பாடகர்: சக்திஸ்ரீ கோபாலன்
பாடல் வரிகள் : இளங்கோ கிருஷ்ணன்
அகநக அகநக
முகநகையே…. ஓஓஓ
முகநக முகநக
முருநகையே… ஓஓஓ
முறுநக முறுநக
தருநகையே… ஹோ ஓஹோ..
தருநக தருநக
வருநனையே…
யாரது யாராது
புன்னகை கோர்ப்பது
யாவிலும் யாவிலும்
என் மனம் சேர்ப்பது
நடை பழகிடும்
தொலை அருவிகளே… ஓஓஓ
முகில் குடித்திடும்
மலை முகடுகளே… ஓஓஓ
குடை பிடித்திடும்
நெடு மர செறிவே
பனி உதிர்த்திடும்
சிறு மலர் தூளியே
அழகிய புலமே
உனத்திள மகள் நான்
வளவனின் நிலமே
என தரசியும் நீ
வளநில சிரிப்பே
என்னதுயிரடியோ
உனதிளம் வனப்பே
எனக்கினிதடியோ…
உனை நினைக்கையில்
மனம் சிலிர்த்திடுதே..
உன் வழி நடந்தால்
உயிர் மலர்ந்திடுதே
உன் மடி கிடந்தால்
தவிதவிக்கிறதே
நினைவழிந்திடுதே
அகநக அகநக
முகநகையே…. ஓஓஓ
முகநக முகநக
முருநகையே… ஓஓஓ
முறுநக முறுநக
தருநகையே… ஓஓஓ
தருநக தருநக
வருநனையே…
யாரது யாராது
புன்னகை கோர்ப்பது
யாவிலும் யாவிலும்
என் மனம் சேர்ப்பது
யாரது யாராது
புன்னகை கோர்ப்பது
யாவிலும் யாவிலும்
என் மனம் சேர்ப்பது