PIC COURTESY: Twitter india
-
perfecttamil
- December 14, 2020
- 3:28 pm
- actor vijay twitter, master, master movie relese, vijay movies, vijay songs, தளபதி விஜய், மாஸ்டர், மாஸ்டர் திரைப்படம்
மாஸ்டர் திரைப்படம்
மாஸ்டர் திரைப்படம் 2020ஆம் ஆண்டில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட திரைப்படங்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. நடிகர் விஜய், விஜய் சேதுபதி ,மாளவிகா மோகன் போன்ற பலர் நடித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் இந்த வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தப் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும் என பல குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் ட்விட்டர் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட படங்களின் தரவரிசை பட்டியலை வெளியிடும் அதில் இந்த ஆண்டு தென்னிந்தியாவில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் மற்றும் பவன் கல்யாணின் வக்கீல் சாப் மற்றும் தல அஜித்தின் வலிமை திரைப்படங்கள் முதல் மூன்று இடத்தை பிடித்தன.

PIC COURTESY: Twitter india
இதுமட்டுமல்லாமல் 2020 தென்னிந்திய சூப்பர்ஸ்டார்களைப் பற்றி அதிகம் ட்வீட் செய்யப்பட்ட பட்டியலில் தளபதி விஜய் இந்த முறை மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இந்தப் பட்டியலில் விஜய் மூன்றாவது இடத்தை பிடிப்பதற்கு காரணம் என்னவெனில் நடிகர் விஜய் அதிக அளவில் ட்விட்டரில் கருத்துக்களை பகிர்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

PIC COURTESY: Twitter india
மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழா தொடங்கியதிலிருந்தே மாஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மேலும் மாஸ்டர் படத்தின் டிரைலர் பல கோடி பார்வையாளர்களை தொட்ட நிலையில் இந்தப் படத்தை மீதான எதிர்பார்ப்பு சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தன.
ஏற்கனவே தளபதி விஜய் பதிவிட்ட புகைப்படம் இந்திய அளவில் அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படி தொடர்ச்சியாக நடிகர் விஜய் ட்விட்டரில் கொண்டாடப்படுவது விஜய் ரசிகர்களுக்கு நடிகர் விஜய்க்கும் மிகப்பெரிய மாஸ் இமேஜை தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் உருவாகியுள்ளது விஜய் எதிர்காலத்தில் ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு ஏற்கனவே தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது இந்த ட்விட்டர் நிகழ்வுகள்