Aari பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூறிய Bala & Sanam

நடிகரும் Bigg Boss டைட்டில் வின்னர் Aari பிறந்தநாளுக்கு சக போட்டியாளர்கள் மட்டுமின்றி நிறைய பெரும் வாழ்த்துக்கள் சொல்லி இருக்காங்க.ரொம்ப ஸ்பெஷலா சனம் சொன்ன வாழ்த்து பலருடைய கவனத்தையும் பெற்றுள்ளது. நான் நேரடியா மீட் பண்ணி உங்களுக்கு வாழ்த்து சொல்ல ஆசையா இருந்தது. ஆனால் வெளியூரில் இருப்பதால் என்னால் நேரில் சந்திக்க முடியவில்லை. பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது நிறைய விஷயங்கள் பேசினோம். பொதுவாக பெண்களுக்கு நீங்க  ரொம்ப மரியாதை கொடுக்குறீங்க. நிறைய பேரு உங்கள பாத்து கத்துக்கணும் எல்லாருமே ஒரு முன்னுதாரணமாக நீங்க இருக்கீங்க .நீங்க நூறு வருஷம் நல்லா வாழனும்.  இதே மாதிரி நிறைய பேருக்கு உதவி செய்யணும் உங்க கிட்ட நாங்கள் நிறைய விஷயங்கள் கத்துக்கணும். இந்த சகோதரியின் அன்பான  பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று வீடியோ மூலமாக பதிவிட்டுள்ளார் நடிகை சனம்

சனம் ஐ தொடர்ந்து பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் தன்னுடைய பதிவில் இனிமே வெற்றி மட்டுமே காண வாழ்த்துக்கள் பார்ட்னர் என பதிவிட்டுள்ளார்.

மேலும் RIO ,நடிகை ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி,  சிவானி போன்ற பிக்பாஸ் போட்டியாளர்களுடன் Aari ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து சொல்லி உள்ளனர். 

இதனால் மிகவும் சந்தோஷமடைந்து Aari எனக்கு வாழ்த்து கூறிய அனைத்து சகோதரர்கள் மற்றும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி என்று தனது பாணியில் ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.